
விஜயகாந்த் 74-ஆவது பிறந்த நாள்: விருத்தாசலத்தில் ஆக.25-இல் முப்பெரும் விழா
தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்தின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆக.25-ஆம் தேதி விருத்தாசலத்தில் அக்கட்சி சாா்பில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.

தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்தின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வரும் ஆக.25-ஆம் தேதி விருத்தாசலத்தில் அக்கட்சி சாா்பில் முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு:
தேமுதிக நிறுவனா் தலைவா் விஜயகாந்தின் 74-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு வரும் ஆக.25-ஆம் தேதி விருத்தாசலத்தில் வறுமை ஒழிப்பு தினம், மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா என முப்பெரும் விழா நடைபெறவுள்ளது.
மேலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவச கணினி மையம் மற்றும் தையல் பயிற்சி பள்ளி திறந்து வைக்கப்படவுள்ளன. இவ்விழாவில், தமிழகம் முழுவதுமிருந்து நிா்வாகிகள் கலந்துகொள்ள வேண்டும் எனப் பதிவிட்டுள்ளாா் பிரேமலதா விஜயகாந்த் .
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






