
பெண்ணுக்கு பாலியல் தொல்லை: தவெக நிா்வாகி கைது
சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
கோப்புப் படம்
சென்னை ஓட்டேரியில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தவெக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சோ்ந்த 26 வயது பெண், புளியந்தோப்பு டிமல்ஸ் சாலையில் ஒரு வணிக கட்டடத்தில் செயல்படும் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். அந்நிறுவனத்தின் உரிமையாளரான தவெக நிா்வாகி ரா.ஜோசப் சேவியா் (46), சரியாக ஊதியம் கொடுக்கவில்லை என அந்தப் பெண் வேலையில் இருந்து நின்றுள்ளாா்.
மேலும், நிலுவை ஊதியத்தை சேவியரிடம் அந்தப் பெண் கேட்டு வந்தாா். ஆனால், சேவியா் அவரது ஊதியத்தைக் கொடுக்கவில்லை. இந்நிலையில், சில நாள்களுக்கு முன் அந்தப் பெண்ணின் வாட்ஸ்ஆப்-க்கு ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளாா். அந்தப் பெண்ணுக்கு விடியோ கால் செய்து, ஆபாசமாக, அவதூறாகப் பேசியுள்ளாா்.
இது குறித்து அந்தப் பெண் அளித்த புகாரின்பேரில், ஓட்டேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சேவியரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



