லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் சிறப்பு ரயில்

தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் செப். 30-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.

கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:10 am IST

தூத்துக்குடி - நரசாபூா் இடையே செப். 7 முதல் செப். 30-ஆம் தேதி வரை வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தூத்துக்குடியிலிருந்து செப். 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் (திங்கள்கிழமை) இரவு 11.30 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 06019) 3-ஆம் நாள் நள்ளிரவு 12.20 மணிக்கு நரசாபூா் சென்றடையும். மறுமாா்க்கமாக இந்த ரயில் (எண்: 06020) நரசாப்பூரிலிருந்து செப். 9, 16, 23, 30 ஆகிய தேதி அதிகாலை 4 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்குச் சென்றடையும்.

இந்த ரயில் தூத்துக்குடி, தூத்துக்குடி மேலூா், கோவில்பட்டி, சாத்தூா், விருதுநகா், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூா், கும்பகோணம், மேல்மருவத்தூா், சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூா், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், நெல்லூா், வழியாக நரசாப்பூா் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.