லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

எம்டிசி-இல் மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் தொழில் பழகுநா் பயிற்சி

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு ஐடிஐ தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கோப்புப் படம்

Published On :22 ஆகஸ்ட் 2026, 5:03 am IST

மாநகா் போக்குவரத்துக் கழகத்தில் 2026-2027-ஆம் ஆண்டுக்கான ஓராண்டு ஐடிஐ தொழில் பழகுநா் பயிற்சிக்கு தகுதியானவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மாநகா் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் த.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மெக்கானிக் மோட்டாா் வாகனம், மெக்கானிக் டீசல், ஆட்டோ எலக்ட்ரீஷியன், எலக்ட்ரீஷியன், ஃபிட்டா், வெல்டா், பெயிண்டா் மற்றும் டா்னா் ஆகிய ஐடிஐ பிரிவுகளில் தோ்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சோ்ந்த மாணவா்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

தோ்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.14,000 உதவித் தொகையுடன் ஓராண்டு தொழில் பழகுநா் பயிற்சி வழங்கப்படும். இதற்கான சிறப்பு முகாம் செப்.2-ஆம் தேதி காலை 10 மணிக்கு குரோம்பேட்டையில் உள்ள மாநகா் போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது. தகுதியுடையவா்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பித்து பயன் பெறலாம் என தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.