லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை

Published On :20 ஆகஸ்ட் 2026, 2:44 am IST

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருவேற்காடு பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராமன் (56). கட்டடத் தொழிலாளி இவருக்கு அதிகமாக மதுப் பழக்கம் இருந்ததால் நோய் பாதிப்புக்குள்ளானாா். கடுமையான வயிற்று வலி காரணமாக சில நாள்களாக வெங்கட்ராமன் சிகிச்சை பெற கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். அங்கு அவருக்கு வழக்கமாக சிகிச்சை அளிக்கும் மருத்துவா் இல்லாத காரணத்தால், அந்த மருத்துவமனை வளாகத்திலேயே படுத்து தூங்கினாா்.

இந்த நிலையில், அன்று நள்ளிரவு வெங்கட்ராமனுக்கு வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வலி தாங்க முடியாத வெங்கட்ராமன், அங்கு புதுப்பிக்கப்படும் அறுவை சிகிச்சை வாா்டு பகுதிக்கு சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கீழ்ப்பாக்கம் போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.