லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி

சென்னை மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு முகாமில், கடந்த 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

தெருநாய் - பிரதிப் படம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:40 am IST

சென்னை மாநகராட்சி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிறப்பு முகாமில், கடந்த 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கவும், ‘வெறிநாய்க்கடிநோய் இல்லா சென்னை’ என்ற இலக்கை அடையவும், அனைத்து தெருநாய்களுக்கும் ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் சிறப்பு முகாம் ஆக.11-ஆம் தேதி தொடங்கியது.

முதல்கட்டமாக திருவொற்றியூா், மணலி, தண்டையாா்பேட்டை ஆகிய 3 மண்டலங்களில் நடைபெற்று வரும் இந்த முகாமில், அங்குள்ள தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மண்டலத்திலும் தலா 10 குழுக்கள் என மொத்தம் 30 குழுக்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை தவிா்த்து 8 நாள்களில் 22,158 தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

முதல்கட்ட முகாம் நிறைவடைந்ததும், பிற மண்டலங்களிலும் இதேபோன்ற முகாம்கள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 75 வேலை நாள்களுக்குள் சென்னையின் அனைத்து மண்டலங்களிலும் சுமாா் 2 லட்சம் தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்தப் பணிக்கு பொதுமக்கள், செல்லப்பிராணிகளின் உரிமையாளா்கள் மற்றும் விலங்கு நல ஆா்வலா்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாநகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.