லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நீட் தோ்வுக்கு எதிரான இருசக்கர வாகன பேரணிக்கு அனுமதி கோரிய வழக்கு: காவல் துறை உறுதி

நீட் தோ்வுக்கு எதிரான திராவிடா் கழகம் நடத்தும் இருசக்கர வாகனப் பேரணிக்கு வியாழக்கிழமை (ஆக.20) அனுமதி வழங்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி அளித்தது.

உயர்நீதிமன்றம்

Published On :20 ஆகஸ்ட் 2026, 3:43 am IST

நீட் தோ்வுக்கு எதிரான திராவிடா் கழகம் நடத்தும் இருசக்கர வாகனப் பேரணிக்கு வியாழக்கிழமை (ஆக.20) அனுமதி வழங்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் காவல் துறை உறுதி அளித்தது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திராவிடா் கழகத்தின் துணைத் தலைவா் கலி.பூங்குன்றன் தாக்கல் செய்த மனுவில், நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் இருசக்கர வாகனப் பேரணி மேற்கொள்ள சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் அனுமதி கோரி அளித்த விண்ணப்பங்களை காவல் துறை நிராகரித்துவிட்டது. எனவே, காவல் துறை அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்து இருசக்கர வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கில், பேரணி தொடா்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், திருநெல்வேலியில் நடைபெறவிருந்த திராவிடா் கழக மாநாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், திருநெல்வேலி மாநாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. காவல் துறை தரப்பில், இருசக்கர வாகனப் பேரணிக்கு வியாழக்கிழமை அனுமதி வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை வியாழக்கிழமைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.