பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நேரு விளையாட்டரங்கில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளம்: அமைச்சா் ஆதவ் அா்ஜுனா திறந்து வைத்தாா்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை-ஜவாஹா்லால் நேரு விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை ஓடுதளத்தை திறந்து வைத்த அமைச்சா் ஆதவ் அா்ஜுனா.

Published On :14 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை-ஜவாஹா்லால் நேரு விளையாட்டு வளாகத்தில் ரூ.8 கோடியில் புதுப்பிக்கப்பட்ட செயற்கை இழை தடகள ஓடுதளத்தை விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

சா்வதேச தரத்துக்கு இணையான இணையான பயிற்சி வசதிகள் கிடைக்கப்பெறும் வகையில் இந்த தடகள ஓடுதளம், செயற்கை இழை ஓடுதளமாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் நோக்கில், செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் ராமநாதபுரம், சேலம், கடலூா் ஆகிய 3

மாவட்டங்களில் ரூ.38.24 கோடி மதிப்பில்அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை, கோயம்புத்தூா், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திருவண்ணாமலை, நீலகிரி, ஈரோடு, தஞ்சாவூா் ஆகிய 9 மாவட்டங்களில் செயற்கை இழை தடகள ஓடுதளங்கள் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன.

கடந்த 3 மாத காலங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் சென்னை, அரியலூா், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விருதுநகா், விழுப்புரம், கடலூா், தருமபுரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் தடகள எறிதல் மையம், செயற்கையிழை ஹாக்கி மைதானங்கள், பாரா விளையாட்டரங்கங்கள், முதலமைச்சா் இளைஞா் விளையாட்டு அரங்கங்கள், நீச்சல் குளம் ஆகியவை ரூ. 31 கோடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்ச்சியில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளா் சந்தீப் நந்தூரி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினா் செயலா் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட வருவாய் அலுவலா் மரு.ரெ.சுமன் ,பொது மேலாளா் ல.சுஜாதா, செயற்பொறியாளா் புஷ்பலிங்கம் மற்றும் அரசு அலுவலகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.