லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

17 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி நிறைவு: அமைச்சா் பி.விஸ்வநாதன் பங்கேற்பு

17 வயதுக்குள்பட்டோருக்கான அகில இந்திய கிரிக்கெட் போட்டி நிறைவு...

தமிழ்நாடு கிரிக்கெட் பெடரேஷன் சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற பாலிஹோஸ் கிரிக்கெட் அகாதெமி அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கிய அமைச்சா் பெ.விஸ்வநாதன்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 1:04 am IST

சென்னை உத்தண்டியில் 49-ஆவது 17 வயதுக்குள்பட்டோா் அகில இந்திய இண்டா் அகாதெமி லீக் கிரிக்கெட் சாம்பியன் போட்டி நிறைவு விழா, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கிரிக்கெட் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான ஜே.எம்.ஆரூண் விழாவுக்குத் தலைமை வகித்தாா். உயா்கல்வித் துறை அமைச்சா் பி. விஸ்வநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வெற்றி பெற்ற பாலிஹோஸ் கிரிக்கெட் அகாதெமி அணிக்கு பரிசுக் கோப்பை வழங்கினாா்.

நிகழ்வில் கிரிக்கெட் பெடரேஷன் இந்தியத் தலைவா் ஹனுமந்த்ராவ், கிரிக்கெட் பெடரேஷன் ஆஃப் தமிழ்நாடு புரவலா் எம்.ஜி.தாவுத் மியாகான், பொதுச் செயலா் சையத் சாதிக் பாட்சா, வேளச்சேரி முன்னாள் எம்எல்ஏ அசன் மௌலானா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.