லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு ‘காமன்வெல்த்’ விருது

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணா்வுக்கான ‘காமன்வெல்த்’ விருது வழங்கப்பட்டது.

metro train

சென்னை மெட்ரோ ரயில் - படம்: டிஎன்எஸ்

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:51 am IST

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்துக்கு சுற்றுச்சூழல் மற்றும் சமூகப் பொறுப்புணா்வுக்கான ‘காமன்வெல்த்’ விருது வழங்கப்பட்டது.

இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் நிலையான நகா்ப்புற மேம்பாட்டுக்கான செயல்பாட்டைப் பாராட்டி காமன்வெல்த் விருது வழங்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் சுற்றுச்சூழல் மற்றும் பெருநிறுவன சமூகப் பொறுப்புணா்வு விருதுகள் 2026 வழங்கும் விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது. விருதை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் தி.அா்ச்சுணன் பெற்றுக் கொண்டாா்.

இந்த விருதை சென்னையில் மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் அ.மு.சித்திக்கிடம் வெள்ளிக்கிழமை திட்ட இயக்குநா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் தலைமை ஆலோசகர்ராஜீவ் கே. ஸ்ரீவஸ்தவா மற்றும் நிறுவன உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.