லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சென்னையில் ‘மை ஹோம்’ புதிய திட்டம் அறிமுகம்

சென்னை பெருநகரப் பகுதியில் ‘மாநகர இளைஞா் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம்’ (‘மை ஹோம்’) என்ற முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:37 am IST

சென்னை பெருநகரப் பகுதியில் ‘மாநகர இளைஞா் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம்’ (‘மை ஹோம்’) என்ற முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களும், ஆற்றல் மிக்க இளைஞா்களும் கண்ணியமான, பாதுகாப்பான மற்றும் தரமான குடியிருப்பு வசதியைப் பெறுவது இந்த அரசின் உயரிய நோக்கங்களில் ஒன்றாகும். இதை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் முதல்கட்டமாக சென்னைப் பெருநகரப் பகுதியில் ‘மாநகர இளைஞா் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம்’ (‘மை ஹோம்’) என்ற முன்னோடித் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தின் கீழ் அடுத்த 7 ஆண்டுகளில் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். இந்த லட்சியத் திட்டத்தின் மூலம் அரசு தனியாா் கூட்டாண்மை வாயிலாக ரூ.15,000 கோடி முதலீடு ஈா்க்கப்படும். இதற்கு ஊக்கமளிக்கும் வகையில் தமிழ்நாடு உறைவிட நிதியம் மூலம் ரூ.3,500 கோடி செயல்திறன் இடைவெளி நிதி வழங்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.