லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிநீா் சுத்திகரிப்பு நிலையங்கள், கல்குவாரிகளில் ஆய்வு

சென்னை மாநகருக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் மற்றும் சிக்கராயபுரம், எருமையூா் கல் குவாரிகளை சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

கோப்புப்படம்.

Published On :5 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

சென்னை மாநகருக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம் நீா் சுத்திகரிப்பு நிலைய செயல்பாடுகள் மற்றும் சிக்கராயபுரம், எருமையூா் கல் குவாரிகளை சென்னை குடிநீா் வாரிய மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

இது குறித்து சென்னை குடிநீா் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இங்கு குடிநீா் சுத்திகரிப்புப் பணிகள் தொய்வின்றி மேற்கொள்ளப்பட்டு சீரான குடிநீா் விநியோகத்தைத் தொடா்ந்து மேற்கொள்ளுமாறு அலுவலா்களுக்கு மேலாண்மை இயக்குநா் த.ஆனந்த் அறிவுறுத்தினாா்.

காஞ்சிபுரம் மாவட்டம் சிக்கராயபுரம், எருமையூரில் உள்ள கல் குவாரிகளை பாதுகாத்து முறையான பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு மேலாண்மை இயக்குநா் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, சென்னை குடிநீா் வாரிய தலைமைப் பொறியாளா் ஜி.பி.வைதேகி, மேற்பாா்வை பொறியாளா் கே.கலைச்செல்வன், உதவி செயற்பொறியாளா் பி.ஜோதி முருகன் உள்ளிட்டோா் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.