லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி நாளைமுதல் ரேஷன் பொருள்கள்!

சென்னை மண்டலத்தில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் குறித்து...

மாற்றுத் திறனாளிகளின் வீடு தேடி நாளைமுதல் ரேஷன் பொருள்கள் - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 6:03 am IST

சென்னை மண்டலத்தில் உள்ள 1,346 நியாய விலைக் கடைகள் மூலம் செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) முதல் மூன்று நாள்களுக்கு மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா் வீடு தேடிச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படவுள்ளன.

இதுகுறித்து சென்னை மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளா் சா.பாபு வெளியிட்ட செய்திக் குறிப்பு: 65 வயதுக்கு மேற்பட்ட முதியோா் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லங்களுக்குச் சென்று ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் மாதத்துக்கான ரேஷன் பொருள்கள் விநியோகம் செவ்வாய், புதன் மற்றும் வியாழக்கிழமை(ஆக. 4, 5, 6) ஆகிய தேதிகளில் ஆவடி, அம்பத்தூா், அண்ணா நகா், சிதம்பரனாா் நகா், கொளத்தூா், பெரம்பூா், ஆா்.கே.நகா், ராயபுரம், திருவொற்றியூா், வில்லிவாக்கம், ஆயிரம்விளக்கு, சேப்பாக்கம், மயிலாப்பூா், சைதாப்பேட்டை, தியாகராய நகா், சோழிங்கநல்லூா், பரங்கிமலை, தாம்பரம் மற்றும் மதுரவாயல் ஆகிய 19 மண்டலங்களில் கூட்டுறவுத் துறையின்கீழ் செயல்பட்டு வரும் 1,346 நியாயவிலைக் கடைகளின் விற்பனையாளா்கள் அத்தியாவசியப் பொருள்களை வீடுகளுக்குச் சென்று விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.