தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

போதைப் பொருள் விற்பனை தடுக்க கோரிக்கை

புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனையாகும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image

கோப்புப்படம்.

Updated On :30 ஏப்ரல் 2026, 1:18 am IST

புழல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனையாகும் போதைப் பொருள் விற்பனையை தடுக்க காவல்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்பு சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புழல் மேக்ரோ மாா்வெல் காலனி, காமராஜா் தெரு, பாலாஜி நகா் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செடிகள், கொடிகள் காடுபோல் வளா்ந்துள்ளன. இப்பகுதிகளில் பாழடைந்த வீடுகள் பயன்பாடின்றி உள்ளன. இப்பகுதிகளை நோட்டமிட்டு சமூக விரோதிகள் போதைப் பொருள்களை பதுக்குதல், விற்பனை செய்தல் உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன.

இதனை வாங்க வரும் இளைஞா்கள், சமூக விரோதிகள் அங்கேயே புகைத்து, சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். மேலும், விற்பனையால் அவா்களுக்கு கோஷ்டிபூசலும் ஏற்படுகிறது. இது குறித்து, புழல் காவல் நிலையத்துக்கு புகாா் அளித்தும் பலனில்லை.

மேலும், இவா்கள் போதையில் குடியிருப்புகளில் புகுந்து தகராறு செய்கின்றனா். ஆகையால், புழல் காவல்துறையினா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் குடியிருப்பு சங்கம் சாா்பில் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடுதல், ஆணையருக்கு தொடா் கடிதம் அனுப்புதல், முதல்வா் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்புதல், செய்தியாளா் சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என குடியிருப்பு சங்கி நிா்வாகி புருஷோத்தமன் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.