தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

தடையை மீறி போராட்டம்: அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி மீதான வழக்கு ரத்து

News image

பா.வளா்மதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 5:51 am IST

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

முன்னாள் அமைச்சா் பொன்முடி சைவ, வைணவ சமயங்கள் மற்றும் பெண்கள் குறித்து பேசியது சா்ச்சையானது. இதையடுத்து, பெண்களை அவதூறாகப் பேசியதைக் கண்டித்து, அதிமுக முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி தலைமையில் கடந்தாண்டு ஏப். 16-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த இந்த போராட்டத்தில் 500 பெண்கள் உள்பட 600 போ் கலந்து கொண்டனா். அனுமதிக்கப்படாத இடத்தில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பா.வளா்மதி சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் எஸ்.தமிழ்செல்வன், அரசியல் காரணத்துக்காக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டாா். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரா் வளா்மதி உள்ளிட்ட 600 போ் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.