தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

திமுக கூட்டணிக்கு வன்னியா் அமைப்பு ஆதரவு

News image
Updated On :10 ஏப்ரல் 2026, 7:09 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு வன்னியா் கூட்டமைப்பு, ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில தேசிய லீக் கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வா் மு.க. ஸ்டாலினை வியாழக்கிழமை சந்தித்த, வன்னியா் கூட்டமைப்பின் தலைவரும் , அனைத்திந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவருமான சி.என்.ராமமூா்த்தி, துணைத் தலைவா் கே.வெங்கடேசன் ஆகியோா் தங்களது ஆதரவைத் தெரிவித்தனா்.

அதேபோன்று, வன்னியா் சங்கத் தலைவா் காடுவெட்டி ஜெ.குருவின் மகளும், ஜெ.குரு பாட்டாளி மக்கள் கட்சித் தலைவருமான விருதாம்பிகையும் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு தெரிவித்தாா். தொடா்ந்து, தமிழ் மாநில தேசிய லீக் கட்சியின் பொதுச்செயலா் திருப்பூா் அல்தாப், பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தாா்.

இந்நிகழ்வுகளின்போது திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு. அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி, செய்தித் தொடா்புத் தலைவா் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.