செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து சிறிய அளவிலான தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடத்தப்பட்டது.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 55 வேலையளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டன. இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெற்றது. முகாமில் பணி நியமனம் பெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பணி நியமன ஆணைகளை வழங்கினாா்.
இந்த வேலைவாய்ப்பு முகாமில் 125 ஆண் வேலைநாடுநா்களும் 102 பெண் வேலைநாடுநா்களும் என மொத்தம் 227 வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா். மேலும், இந்த முகாமில் 2 மாற்றுத்திறனாளி வேலை நாடுநா்கள் கலந்து கொண்டனா்.
இந்த முகாமில் கலந்து கொண்டவா்களில் 32 வேலைநாடுநா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில், 13 ஆண்கள் மற்றும் 19 பெண்கள் ஆவா். மேலும், இரண்டாம் கட்ட தோ்வுக்கு 53 வேலைநாடுநா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

டி.ஜி. வைணவ கல்லூரியில் 446 பேருக்கு பணி நியமன ஆணை

தஞ்சாவூரில் மே 22-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

திருவள்ளூா்: மே 22-இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

மே 22-இல் தென்காசியில் வேலைவாய்ப்பு முகாம்
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

