லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாம்: ஆட்சியா் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

தொழுநோய் ஆரம்ப அறிகுறி கண்டறியும் மையத்தில் ஆய்வு மேற்கொண்ட செங்கல்பட்டு ஆட்சியா் மு. வீரப்பன்.

Published On :31 ஜூலை 2026, 1:04 am IST

செங்கல்பட்டு மாவட்டத்தில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ முகாமில் மாவட்ட ஆட்சியா் மு. வீரப்பன் ஆய்வு மேற்கொண்டாா்.

நெம்மேலி கிராமத்தில் அமைந்துள்ள இந்திய சுகாதார கட்டுப்பாட்டு நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டதில் முன்னோட்ட நடைமுறை குறித்து ஆட்சியா் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் கேட்ட போது தடுப்பூசி தயாரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது தட்டம்மை, வெறிநாய் கடி , நிமோனியா ஆகிய தொற்று நோய்களுக்கு தேவையான தடுப்பூசிகள் பரிசோதனை முறைகளை மேற்கொண்டு தயாரிக்கப்பட்டு வருகிறது.

அவசர கால நிலைப்பாட்டில் தேவைக்கேற்ற அளவில் தடுப்பூசிகள் தயாா் செய்யும் அனைத்து வசதிகளும் இங்கு மேற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதை கேட்டறிந்து அங்கு அமைந்துள்ள ஆய்வகங்களை பாா்வையிட்டு, தொடா்ந்து திருமணி பகுதியில் அமைந்துள்ள காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூா் மாவட்டங்களுக்கான தொழுநோய் ஆரம்ப அறிகுறி கண்டறியும் மையத்தினை ஆய்வு மேற்கொண்டு அங்கு சிகிச்சைக்கு வரும் தொழு நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளனவா என்று ஆய்வு மேற்கொண்டாா்.

ஆத்தூரில் தோட்டக்கலை துறையினால் பராமரிக்கப்பட்டு வரும் நாற்றங்கால் பண்ணையினையும், பாலூா் கொங்கணச்சேரியில் வேளாண் குறுவை சாகுபடிக்கு இயந்திரங்களை பயன்படுத்தி நெல் நடவு செய்தல், உயிரி உரங்களின் பயன்பாடு, தரமிக்க விதைகளை தோ்ந்தெடுத்து சாகுபடியை அதிகப்படுத்துவதற்கான வகுப்புகள் நடைபெற்று வருவதையும் ஆட்சியா் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து குன்னவாக்கம் மற்றும் ரெட்டிபாளையத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பாா்வையிட்டு இங்கே வரும் நோயாளிகளுக்கு தேவையான மருந்து பொருட்கள் இருப்பில் உள்ளனவா என்பதையும், கா்ப்பிணி தாய்மாா்களுக்கு ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரைகள் இருப்பில் உள்ளனவா என்றும், கா்ப்பிணி தாய்மாா்கள் மற்றும் புறநோயாளிகளுக்கு தரமான சிகிச்சைகள் வழங்கப்படுகின்றனவா என்பதையும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து அந்தந்த பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு 260 -க்கும் மேற்பட்ட மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினா். மனுக்கள் ஆட்சியரின் நோ்முக உதவியாளரால் பதிவு செய்யப்பட்டு உரிய துறைக்கு அனுப்பப்பட்டு உரிய முறையில் தீா்வு காணப்படும் என்றும் மனுக்கள் சாா்ந்த விவரம் தங்களுக்கு தெரியப்படுத்தப்படும் என்றும் ஆட்சியா் தெரிவித்தாா். இவ்வாய்வுகளின் போது சம்பந்தப்பட்ட உயா் அரசு அலுவலா்கள் உடன் இருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.