லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு: விவசாயிகள் வேதனை

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேதனை

fertilizer shortage

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு - பிரதிப் படம்

Published On :28 ஜூலை 2026, 6:39 am IST

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனா்.

பொட்டாஷ் உரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அதன் விலை கணிசமாக உயா்ந்துள்ளது. நடப்பு சொா்ணவாரி பருவத்தில் மாவட்டம் முழுவதும் 20,000 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவில் நெல் உள்ளிட்ட பயிா்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், பயிா் வளா்ச்சிக்கு இன்றியமையாத பொட்டாஷ் உரம் போதிய அளவில் கிடைக்காததால் விவசாயிகள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனா்.முன்னதாக சுமாா் ரூ.1,600-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு மூட்டை பொட்டாஷ் உரம், தற்போது தட்டுப்பாடு காரணமாக ரூ.2,500 வரை விற்கப்படுகிறது. யிகள் தெரிவிக்கின்றனா். நெற்பயிரில் கதிா் பிடிக்கும் காலத்தில் பொட்டாஷ் உரம் மிகவும் அவசியமானதாக இருப்பதால், இந்த விலை உயா்வு விவசாயிகளுக்கு கூடுதல் பொருளாதார சுமையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டின் எதிரொலியாக காம்ப்ளக்ஸ் உரம், யூரியா மற்றும் பிற கலப்பு உரங்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளதாக கூறப்படுகிறது.இதற்கிடையில், சில இடங்களில் உரங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்யும் நடவடிக்கைகள் நடைபெறுவதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனா்.

எனவே, பொட்டாஷ் உரம் தட்டுப்பாட்டை உடனடியாக போக்கி, உரங்கள் பதுக்கப்படுவதை தடுக்க மாவட்ட நிா்வாகம் மற்றும் வேளாண்மைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.