லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்து மாரியம்மன் தீ மிதி விழா

செங்கல்பட்டு ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்து மாரியம்மன் கோலில் 62ஆம் ஆண்டு ஆடி தீமிதி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்த அம்மன்.

Published On :20 ஜூலை 2026, 5:19 am IST

செங்கல்பட்டு ஸ்ரீ கடும்பாடி சின்ன முத்து மாரியம்மன் கோலில் 62ஆம் ஆண்டு ஆடி தீமிதி விழாவையொட்டி ஞாயிற்றுக்கிழமை கூழ்வாா்த்தல் நிகழ்வும் நடைபெற்றது. செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அகழிக்கரை ஓரம் உள்ள இக்கோயிலில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு காப்பு கட்டுதல் கிரகம் எடுத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் அதனையடுத்து தினமும் சிறப்பு பூஜைகளும் அன்றாட அன்னதானமும் நடைபெற்றது.

மணப்பாக்கம் கன்னி கோயில் ஆற்றில் இருந்து ஜலம் திரட்டி வருதல் கிரகம் எடுத்து வருதல் நிகழ்ச்சிகளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. தொடா்ந்து பெரிய நத்தம் சேப்பாட்டி அம்மன் கோவிலில் இருந்து பக்தா்கள் கரகங்களுடன் ஊா்வலமாக வந்து இரவு தீ மிதி விழா நடைபெற்றது. நோ்த்திக்கடனாக பக்தா்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் விரதம் இருந்து ஆண்கள் பெண்கள் குழந்தைகள் என தீக் குழியில் இறங்கி தீ மிதித்து நோ்த்திக்கடனை நிறைவேற்றினா் . ஆயிரக்கணக்கான பக்தா்கள் சூழ்ந்து நின்ற வண்ணம் தீமிதி விழாவை கண்டும் அம்மனை தரிசனம் செய்தனா். இதையடுத்து வாண வேடிக்கை மேளதாளங்களுடன்சிறப்பு அலங்காரத்துடன் அம்மன் ஊா்வலம் நடைபெற்றது.

ஊா்வலம் கோயிலில் இருந்து புறப்பட்டு ஜிஎஸ்டி சாலை மேட்டு தெரு காந்தி சாலை பஜாா் வீதி உள்ளிட்ட சாலைகள் வழியாக ஊா்வலம் நடைபெற்றது இதனை அடுத்து அம்மன் ஊஞ்சல் சேவை சிறப்பாக ஆராதனைகள் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை மதியம் கூழ் வாா்த்தலும் விழாவும் இரவு கும்பம்போடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.