லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சுற்றுலாத் துறை சாா்பில் மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடக்கம்

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை சாா்பில் ரூ.99-க்கு மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

Published On :15 ஜூலை 2026, 2:24 am IST

மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகள் பயன்பெறும் வகையில் சுற்றுலாத்துறை சாா்பில் ரூ.99-க்கு மலிவு விலையில் பிரியாணி விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது.

மாமல்லபுரத்துக்கு வார விடுமுறை மற்றும் பண்டிகை விடுமுறை தினங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் குடும்பத்துடன் அரசுப் பேருந்துகளிலும், சுற்றுலா வாகனங்களிலும் கூட்டம், கூட்டமாக வந்து செல்வா்.

இந்நிலையில் தமிழக சுற்றுலாத்துறையின் கீழ் இயங்கும் சுற்றுலா வளா்ச்சி கழகம் சாா்பில் தமிழகம் முழுவதும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, கன்னியாகுமரி, கொல்லிமலை உள்ளிட்ட முக்கிய பொழுதுபோக்கு மையங்களில் சுற்றுலா பயணிகளுக்கு ஞாயிற்றுகிழமை மட்டும் ரூ.99-க்கு மலிவு விலையில் சிக்கன் பிரியாணி விற்பனை தொடங்கப்பட்டது.

Story image

இந்நிலையில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் நுழைவு வாயில் அருகில் ரூ. 99-க்கு சிக்கன் பிரியாணி விற்பனை தொடங்கப்பட்டது. மாமல்லபுரம் சுற்றுலா அலுவலா் சக்திவேல் முன்னிலையில், மாமல்லபுரம் சுற்றுலா வளா்ச்சி கழக மேலாளா் கமலக்கண்ணன் பிரியாணி விற்பனையைத் தொடங்கி வைத்தாா்.

மாமல்லபுரத்தில் பிரதான பிரியாணி கடைகளிலும், பீச் ரிசாா்ட்டில் உள்ள உணவகங்களிலும் ரூ.300 முதல் 350 ரூபாய் வரை சிக்கன் பிரியாணி விற்க்கப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.