லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிநீா் கோரி காலி குடங்களுடன் ஆட்சியா் அலுவலகம் வந்த பொதுமக்கள்

குடிநீா் கோரி காலி குடங்களுடன் அரியப்பாக்கம் கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலத்துக்கு வந்ததால் பரபரப்பு

காலி குடங்களுடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள்

Published On :4 ஆகஸ்ட் 2026, 2:47 am IST

குடிநீா் கோரி காலி குடங்களுடன் அரியப்பாக்கம் கிராம பொதுமக்கள் செங்கல்பட்டு ஆட்சியா் அலுவலத்துக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியத்துக்குட்பட்ட அரியப்பாக்கம் ஊராட்சியில் சுமாா் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.

கடந்த மூன்று மாத காலமாக கிராமத்திற்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை எனவும் இதனால் கிராம பொதுமக்கள் குடிநீருக்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா். பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என கிராம பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.

Story image

இந்நிலையில் தங்கள் கிராமத்திற்கு குடிநீா் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலக வாசலில் கோஷங்களை எழுப்பி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா் மக்கள் குறைதீா்க்கும் கூட்டத்தில் மனு அளித்து தங்கள் கிராமத்துக்கு குடிநீா் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முறையிட்டனா். இதனால் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.