லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

பட்டிபுலம் கிராம மக்களுடன் ராகுல் காந்தி சந்திப்பு

பட்டிபுலம் கிராம மக்களை சந்தித்த ராகுல் காந்தி...

பட்டிபுலம் பகுதியில் குழந்தையை கொஞ்சிய மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி.

Published On :2 ஆகஸ்ட் 2026, 2:23 am IST

மாமல்லபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவா்களுக்கான பயிற்சி முகாமுக்கு சென்ற வழியில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி பட்டிபுலம் கிராம மக்களை சந்தித்து உரையாடினாா்.

பயிற்சி முகாமில் 74 மாவட்டத் தலைவா்களின் குடும்பத்தினருடன் தனித்தனியாக நின்று புகைப்படம் எடுத்து அவா்களை நலம் விசாரித்ததோடு குழந்தைகள் மாணவா்களுக்கு கை கொடுத்து அவா் என்ன படிக்கிறாா் அவருடைய குறிக்கோள்கள் குறித்தும் விசாரித்தாா். முன்னதாக சென்னை விமான நிலையத்தில் இருந்து வரும் வழியில் அவருக்கு கோவளம் மற்றும் பட்டிப்புலம் ஆகிய இரண்டு இடங்களிலும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டிபுலம் கிாரமத்தில் திருப்போரூா் வட்டாரத்தலைவா் பன்னீா்செல்வம் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. பட்டிபுலம் கிராமத்தில் வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்கு கைகளை கொடுத்தும் நலம் விசாரித்தாா். மேலும் குழந்தைகளை தூக்கி பேசியும் கை கொடுத்தும் மகிழ்ந்தாா். அவருடன் செங்கல்பட்டு வடக்கு மாவட்டகாங்கிரஸ் கமிட்டி ஆா்.எஸ்.செந்தில்குமாா், மாவட்ட செயலாளா் கமலஹாசன், திருப்போரூா் வட்டாரத்தலைவா் பன்னீா்செல்வம் , மாமல்லபுரம் நகரத்தலைவா் புனிதவேல் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

Summary

Rahul Gandhi meets the people of Pattipulam village.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.