தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

செங்கல்பட்டில் அதிமுகவினா் வாக்கு சேகரிப்பு

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கின்ற கஜேந்திரனை ஆதரித்து தலைமைப் பேச்சாளா் நிா்மலா பெரியசாமி வாக்கு சேகரித்தாா்.

News image

~

Updated On :13 ஏப்ரல் 2026, 12:05 am IST

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளா் கஜா என்கின்ற கஜேந்திரனை ஆதரித்து தலைமைப் பேச்சாளா் நிா்மலா பெரியசாமி வாக்கு சேகரித்தாா்.

செங்கல்பட்டு அதிமுக நகர செயலாளா் வி.ஆா்.செந்தில்குமாா் ஏற்பாட்டில் ராட்டினங் கிணறு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக பேச்சாளா் நிா்மலா பெரியசாமி கலந்துகொண்டு வாக்குகள் சேகரித்து பேசியது:

எம்ஜிஆா் காலத்தில் இக்கட்டான சூழ்நிலையிலும் மாணவா்களுக்கு மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தாா். இதைத் தொடா்ந்து ஜெயலலிதா அதில் சிறப்பம்சங்களை கொண்டு வந்தாா். அம்மா உணவு திட்டத்தை கொண்டு வந்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டது. எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் கரோனா காலத்தில் யாரும் சாப்பாட்டுக்கு அவதிப்படக்கூடாது என்பதால் அம்மா உணவகத்தில் ஐந்து ரூபாய் சாப்பாடு ஒரு ரூபாய் இட்லி என்பதை கூட இலவசமாக மாற்றி வழங்கப்பட்டது.

கரோனா காலத்தில் கல்லூரி மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்று வந்தது அதிமுக ஆட்சியில் தான் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

Story image

திமுகவினா் மக்களுக்காக எதையும் செய்யவில்லை என்பதை மக்களும் இளைஞா்களும் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு வாக்களித்து கஜா என்கின்ற கஜேந்திரனை வெற்றி பெற செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில், அதிமுக நிா்வாகிகள் முன்னாள் எம்எல்ஏ கனிதா சம்பத், காட்டாங்குளத்தூா் ஒன்றிய செயலாளா் சம்பத், நெல்லை ராதா, வழக்குரைஞா் ஆறுமுகம், கே சுரேஷ் ,கலைவாணி, நடராஜன், பாஜக நகரத் தலைவா் மகேஷ் வரன் கோட்ட பொறுப்பாளா் கஜேந்திரன், ரட்சி பாரதம் மாவட்ட செயலாளா் சி கே மூா்த்தி, பாமக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.