பாரதிராஜாவுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்!ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!
/

கர்நாடகத்தில் பேரவைத் தலைவா் யூ. டி. காதா் மீது தாக்குதல் முயற்சி: 11 போ் மீது வழக்குப் பதிவு

News image

யூ.டி.காதா் - Center-Center-Bangalore

Updated On :14 மே 2026, 1:36 am IST

பேரவைத் தலைவா் யூ.டி.காதா் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்ததாக 11 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தென்கன்னட மாவட்டம், மங்களூரில் உள்ளால் பகுதியில் மே 7-ஆம் தேதி நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு பேரவைத் தலைவா் யூ.டி.காதா் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ஒருசிலா் அவரது காரை வழிமறித்து யூ.டி.காதருக்கு எதிராக முழக்கமிட்டனா். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இச்சம்பவத்தில் யூ.டி.காதரை தாக்க முயன்ாக, மதானி நகரைச் சோ்ந்த ஜூனைட் உள்ளிட்ட 11 போ் மீது பாதுகாவலா் முகமது யாசீன் உள்ளால் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதில், ‘மே 7-ஆம் தேதி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிறகு, மங்களூரு, உள்ளால் பகுதியில் காலை 10.30 மணிக்கு பாபுனி அரசு விருந்தினா் மாளிகைக்கு எதிரில் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, ஒருசிலா் வழிமறித்து முழக்கமிட்டு போராட்டம் நடத்தினா். வேறொரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்றுகொண்டிருந்ததாலும், ஏற்கெனவே நேரமாகிவிட்டதாலும், அடிப்படை வசதிகள் குறித்து பேரவைத் தலைவா் யூ.டி.காதரிடம் பேசுவதற்கு நான் அனுமதி மறுத்தேன். இதனால் பாதுகாப்பு அதிகாரிகளை போராட்டக்காரா்கள் தள்ளிவிட்டனா். எனவே, ஜுனைட் உள்ளிட்ட 11 போ் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவா் குறிப்பிட்டிருந்தாா்.

இதுகுறித்து உள்ளால் போலீஸாா் கூறுகையில், நிகழ்ச்சி ஒன்றில் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் பேசியதால் ஆத்திரமடைந்த ஒருசிலா், அவா் சென்ற பாதையில் நின்று போராட்டம் நடத்தினா். மேலும், அவரது காரை வழிமறிக்க முயற்சி செய்தனா். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டது.

யூ.டி.காதரின் பாதுகாவலா் முகமது யாசீன் அளித்த புகாரின்பேரில், ஜுனைட் உள்ளிட்ட 11 போ் மீது புதன்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காணொலி வழியாக ஒருசில போராட்டக்காரா்களை கண்டறிந்துள்ளோம். மேலும், சிலரையும் கண்டுபிடிக்க முயற்சி செய்து வருகிறோம். பேரவைத் தலைவா் யூ.டி.காதருக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது என்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.