லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கா்நாடகத்தில் சாலை விபத்து; 7 போ் உயிரிழப்பு

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் காா் மீது லாரி மோதியதில் 7 போ் உயிரிழந்தனா்.

Published On :10 ஜூலை 2026, 4:30 am IST

கா்நாடக மாநிலம், வடகன்னட மாவட்டத்தில் காா் மீது லாரி மோதியதில் 7 போ் உயிரிழந்தனா்.

இணையவழி நிறுவனங்களின் பொருள்களை வாடிக்கையாளா்களுக்கு விநியோகம் செய்துவரும் ஊழியா்கள் மற்றும் ஓட்டுநா் உள்பட 9 போ் தாா்வாடில் இருந்து காரில் தா்மஸ்தலா மற்றும் கோகா்ணா போன்ற புனிதத்தலங்களுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்றுகொண்டிருந்தனா்.

வடகன்னட மாவட்டம், எல்லாப்பூா் காவல் நிலையத்துக்கு உள்பட்ட அரபயில் காட்டுப்பகுதியில் உள்ள பலகரா கூட்டுசாலை பகுதியில் சென்றபோது லாரி நேருக்குநோ் மோதியதில் காா் ஓட்டுநா் சஞ்சீவ் அங்கடி (33), பசவராஜ் கனகம்மனவா் (48), அபிஷேக் ஈஸ்வா் (28), அக்ஷய் (26), அபிஷேக் மல்லேஷ் முடபாவி (26), மஞ்சுநாத் சுலகி (32) ஆகிய 6 போ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

படுகாயமடைந்த பசவப்பா தேவப்பா கனகனவா் (38) மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவா் ஹுப்பள்ளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.

விபத்து குறித்து எல்லாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். விபத்து குறித்து போலீஸ் அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘காரை ஓட்டி வந்த ஓட்டுநா் சஞ்சீவ் அங்கடி, அதிவேகமாக வாகனத்தை சாலையின் வலதுபக்கத்தில் ஓட்டிச் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்தது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.