40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

ஈரான் - அமெரிக்கா இடையே பாக். மத்தியஸ்தம் செய்ய வேண்டும்! - சீனா வலியுறுத்தல்!

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் அரசு மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீனா வலியுறுத்தல்...

News image

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ - ANI|கோப்புப் படம்

Updated On :13 மே 2026, 3:59 pm IST

ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமென சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர்நிறுத்த அமைதிப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து நடத்திய பாகிஸ்தான் அரசின் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன. இதையடுத்து, ஈரானிய துறைமுகங்கள் மற்றும் ஹோர்முஸ் நீரிணையை அமெரிக்க படைகள் தொடர்ந்து முற்றுகையிட்டு வந்தன.

இதனால், சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையை ஈரானிய படைகள் முடக்கியதால், பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாடால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தாருடன் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ செவ்வாய்க்கிழமை (மே 12) அன்று செல்போன் வாயிலாக உரையாடியதாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த உரையாடலில், ஹோர்முஸ் நீரிணையை முழுவதுமாகத் திறப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே பாகிஸ்தான் மீண்டும் மத்தியஸ்தம் செய்ய வேண்டுமெனவும், பாகிஸ்தான் அரசின் முயற்சிகளுக்கு சீனா ஆதரவளிக்கும் எனவும் வாங் யீ உறுதியளித்துள்ளார்.

இத்துடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை (மே 13) மாலை அரசு முறைப் பயணமாக சீனாவுக்குச் செல்வார் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.

Summary

China urges the Pakistan government to mediate between Iran and the United States.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.