40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) குறைவு! இன்றைய நிலவரம்!

தங்கம், வெள்ளி விலை இன்று (மே 16) சற்று குறைந்துள்ளது.

News image

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்! - கோப்புப்படம்

Updated On :16 மே 2026, 10:14 am IST

சென்னை: வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமை (மே 16) காலை வணிகம் தொடங்கியதும், தங்கம், வெள்ளி விலைகள் சற்று குறைந்துள்ளன.

சென்னையில் இன்று காலை சில்லறை விற்பனையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,18,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.15 குறைந்து ரூ.14,750க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதுபோல, வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.302க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு 15 குறைந்து ரூ.290க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி ஒரு கிலோவுக்கு ரூ.15 ஆயிரம் குறைந்து ரூ.2,90,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்காசிய போர் பதற்றம் காரணமாக, நாட்டில் பொருளாதார சிக்கல், ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற நேரிட்டுள்ளன. இதன் காணமாக ஓராண்டுக்கு மக்கள் தங்கம் வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருந்த நிலையில் தங்கம், வெள்ளி பொருள்கள் மீதான சுங்க வரியை 6ல் இருந்து 15 சதவீதமாக உயர்த்தி மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது.

இதையடுத்து வியாழக்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 8,560-ம், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 30,000-ம் அதிரடியாக உயர்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மே 12ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.1,14,640 ஆக இருந்த நிலையில், சுங்க வரி உயர்வால் மே 13 மற்றும் 14ஆம் தேதிகளில் ஒரு சவரன் ரூ.1.20 லட்சத்தைத் தொட்டது. பிறகு படிப்படியாக குறைந்து இன்று ரூ.1,18,000க்கு விற்பனையாகி வருகிறது.

Summary

Gold and silver prices have decreased slightly today (May 16).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.