40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேர் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேரும் முதல்வர் விஜய்யை சந்தித்துப் பேசியது குறித்து...

News image

அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தவர்கள் - எக்ஸ்

Updated On :25 மே 2026, 4:33 pm IST

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்த 3 பேரும் முதல்வர் சி. ஜோசப் விஜய்யை சந்தித்துப் பேசினர்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்துப் பேசியதைத் தொடர்ந்து, அவரின் முன்னிலையில் முதல்வர் விஜய்யையும் சந்தித்துள்ளனர்.

மதுராந்தகம் எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல், பெருந்துறை எம்.எல்.ஏ. ஜெயக்குமார், தாராபுரம் எம்.எல்.ஏ. சத்யபாமா ஆகியோர் முதல்வர் விஜய்யை சந்தித்து தவெக உறுப்பினர் அட்டையைப் பெற்றதாகத் தெரிகிறது. விரைவில் இவர்கள் மூன்று பேரும் செய்தியாளர்களை சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.

தமிழக அரசியலில் அதிமுகவில் அதிரடி திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருந்த அதிமுக, சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பு என இரண்டாக உடைந்தது.

இந்நிலையில், சி.வி. சண்முகம் - எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார் மற்றும் சத்யபாமா ஆகியோர் தங்கள் உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

தொடர்ந்து தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்துப் பேசினர். தற்போது ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் முதல்வர் விஜய்யை சந்தித்து மூவரும் பேசியுள்ளனர். முதல்வர் விஜய்யிடம் தவெக உறுப்பினர் அட்டையைப் பெற்றுக்கொண்டதாகவும் தெரிகிறது.

Summary

3 MLAs Who Resigned from SP velumani side admk Meet with Chief Minister Vijay

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.