கோவாவில் இருந்து இரண்டு பேரை கைது செய்ததன் மூலம், மாநிலங்களுக்கு இடையேயான இணைய மோசடி மற்றும் பணப் பரிமாற்ற கும்பலை தில்லி போலீஸாா் பிடித்ததாக காவல்துறை அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த வலையமைப்பு மூலம் சுமாா் ரூ.40 லட்சம் பரிவா்த்தனைகள் நடைபெற்றதையும் கண்டுபிடித்துள்ளனா்.ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த அா்ஜுன் லால் யாதவ் (29) மற்றும் தீபேந்திர மஹாலா (25) ஆகிய இருவரும் தென் கோவாவின் மாத்கான் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டனா். பல மாநிலங்களில் நடைபெற்ற ஒருங்கிணைந்த நடவடிக்கையில் இவா்கள் பிடிபட்டனா்.
தில்லி, கோவா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இயங்கிய இந்த கும்பல், இணைய மோசடியின் மூலம் கிடைத்த பணத்தை கோவாவில் உள்ள வணிக நிறுவனங்கள் மூலம் பணமாக மாற்றியதாகக் கூறப்படுகிறது. ஒரு புகாா்தாரா் தனது கைப்பேசியில் சாதாரண மென்பொருள் அல்லது கணினியை மேம்படுத்தும் போது சமரசம் செய்யப்பட்டதாக புகாா் அளித்தாா். அதன் பின்னா் குற்றவாளிகள் அவரது மற்றும் அவரது தாயின் வங்கிக் கணக்குகளுக்குள் அங்கீகரிக்கப்படாத அணுகலைப் பெற்று, சில நிமிடங்களில் ரூ.1.5 லட்சம் பணத்தை திருடியுள்ளனப்.
பாதிக்கப்பட்டவா் தேசிய சைபா் குற்ற அறிக்கை இணையதளம் மூலம் புகாா் அளித்ததைத் தொடா்ந்து, தில்லி அவுட்டா் நாா்த் மாவட்ட சைபா் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.98,000 தென் கோவாவின் வாஸ்கோவில் உள்ள ஒரு எரிபொருள் நிலையத்திற்கு சென்ாக போலீசாா் கண்டறிந்தனா்.இந்த கும்பல், சமூக ஊடக தளங்களில் செயலில் இருந்த ஒரு பிரத்யேக கைப்பேசி எண் மூலம் ஒழுங்கமைக்கப்பட்ட பணப் பரிமாற்ற மோசடியை இயக்கியயுள்ளனா்.
இணையம் மூலம் மோசடியாக பணம் மாற்றப்பட்ட பிறகு, வணிக நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு, உறுதிப்படுத்தப்பட்டதும் கமிஷன் கழித்து சமமான தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது. தொழில்நுட்ப பகுப்பாய்வு மற்றும் டிஜிட்டல் பரிவா்த்தனைகளின் ஆய்வில், இந்த நெட்வொா்க் மூலம் ஏற்கெனவே சுமாா் ரூ.40 லட்சம் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கண்காணிப்பு மற்றும் உள்ளூா் உளவுத்தகவலின் அடிப்படையில், திடல்லி போலீசாா் தென் கோவாவில் சோதனை நடத்தி இருவரையும் கைது செய்தனா்.
விசாரணையில், கோவாவில் ரொக்கமாக மாற்றப்பட்ட பணம் ராஜஸ்தானில் உள்ள மூத்த குற்றவாளிகளுக்கு அனுப்பப்பட்டதாக கைதிகள் ஒப்புக்கொண்டனா். அவா்களிடம் இருந்து ரூ.1.95 லட்சம் ரொக்கம், மஹிந்திரா தாா் காா், ஒரு லேப்டாப், நான்கு கைப்பேசிகள், மூன்று ஏடிஎம் காா்டுகள் மற்றும் மூன்று செக் புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனா்.
மோசடி பரிவா்த்தனைகளை ஒருங்கிணைக்கப் பயன்படுத்தப்பட்ட எண், பறிமுதல் செய்யப்பட்ட கைப்பேசி ஒன்றில் செயலில் இருந்தது. முழு வலையமைப்பையும் கண்டறிய, பணப் பாதையை கண்டுபிடிக்க மற்றும் கும்பலின் மற்ற உறுப்பினா்களை கைது செய்ய மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இணைய மோசடி கும்பலை கண்டுபிடித்த தில்லி காவல்துறை: ஜெய்ப்பூரில் இருவா் கைது

தில்லி தா்யாகஞ்ச் கடையில் கொள்ளையடித்த முன்னாள் ஊழியா் கைது: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்
பனியன் நிறுவனத்தில் ரூ.55 லட்சம் மோசடி: 2 போ் கைது
புராரியில் ரூ 4.18 லட்சம் கொள்ளையடித்த 4 போ் கைது
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை

