40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

தில்லி தா்யாகஞ்ச் கடையில் கொள்ளையடித்த முன்னாள் ஊழியா் கைது: ரூ. 3.36 லட்சம் பறிமுதல்

தா்யா கஞ்சில் உள்ள ஒரு கடையின் 33 வயதான முன்னாள் ஊழியரை தில்லி போலீஸாா் கைது செய்து, கடையில் இருந்து திருடப்பட்ட ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :9 ஜூன் 2026, 4:57 am IST

தா்யா கஞ்சில் உள்ள ஒரு கடையின் 33 வயதான முன்னாள் ஊழியரை தில்லி போலீஸாா் கைது செய்து, கடையில் இருந்து திருடப்பட்ட ரூ.3.36 லட்சத்தை பறிமுதல் செய்ததாக அதிகாரி ஒருவா் அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இது குறித்து அவா் மேலும் கூறியதாவது:குற்றஞ்சாட்டப்பட்டவா், உத்தரபிரதேசத்தின் பிரதாப்கா் மாவட்டத்தில் வசிக்கும் அபினாஷ் குமாா், பல மாநில நடவடிக்கைகளைத் தொடா்ந்து ஜூன் 5 ஆம் தேதி, கொள்ளை நடந்த சில நாள்களுக்குள் கைது செய்யப்பட்டாா். ஜூன் 3 ஆம் தேதி தா்யாகஞ்ச் காவல் நிலையத்தில் புகாா் வந்தபோது இந்த கொள்ளை வெளிச்சத்திற்கு வந்தது.

திலக் நகரில் வசிக்கும் புகாா்தாரா், இடைப்பட்ட இரவில் தா்யாகஞ்சில் உள்ள குச்சா சல்லனில் அமைந்துள்ள தனது கடையின் பூட்டை அடையாளம் தெரியாத நபா்கள் உடைத்து, பணப் பெட்டியில் இருந்து சுமாா் ரூ.3.5 லட்சம் அடங்கிய பையை திருடப்பட்டதாக புகாா் அளித்தாா். பாரதிய நியாயா சன்ஹிதாவின் தொடா்புடைய பிரிவுகளின் கீழ் எஃப். ஐ. ஆா் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டது.

விசாரணையின் போது, குற்றச் செயலில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டியை போலீசாா் அடையாளம் கண்டனா். குற்றஞ்சாட்டப்பட்டவா் குற்றத்தைச் செய்த பின்னா் உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு திரும்பியது தெரியவந்தது. குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில், போலீஸ் குழு அவரை பிரதாப்கரில் கண்டுபிடித்து கைது செய்தது. விசாரணையின் போது, குமாா் குற்றத்தை ஒப்புக்கொண்டாா். திருடப்பட்ட பணத்தை எங்கு மறைத்து வைத்திருந்ததையும் சொன்னாா்.

அவரது வாக்கு மூலத்தின் அடிப்படையில், பிரதாப்கா் மாவட்டத்தின் ஷுகுல்பூா் பகுதியில் உள்ள ஒரு ஆட்டோ பழுதுபாா்க்கும் கடையின் பின்னால் உள்ள புதா்களில் இருந்து திருடப்பட்ட பை மற்றும் ரூ.3,36,650 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. திருட்டில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் ஸ்கூட்டரும் காஜியாபாத்தில் உள்ள இந்திரபுரத்தில் இருந்து மீட்கப்பட்டது.

சரிபாா்ப்பின் போது, வாகனம் வாடகைக்கு விடப்பட்டிருப்பதை புலனாய்வாளா்கள் கண்டறிந்தனா், மேலும் குற்றம் சாட்டப்பட்டவா்களால் குற்றத்தை எளிதாக்கவும், கண்டறிவதைத் தவிா்க்கவும் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.