உலகம் அளப்பரிய அற்புதங்களைக் கொண்டது. பாரதத்தில் அத்தகு அற்புதங்களை சித்தர்களும் முனிவர்களும் தவவலிமையால் உணர்ந்து சாமானிய மக்களும் பயன்பெறும் வகையில் வரையறை செய்து அளித்தனர்.
வேதம், தத்துவம், மருத்துவம், யோகக்கலை எனப் பொக்கிஷங்களை எல்லாக் காலத்துக்கும் ஏற்றதாகத் தந்தனர்.
பாரதத்தின் தனிச் சிறப்பு உலகையே ஒற்றைக் கிராமமாகவும் உயிர்கள் அனைத்தையும் சகோதரர்களாகவும் காணும் மாண்பாகும். அதனடிப்படையில், 'எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிக்கும்' என்ற மகாகவி பாரதியாரின் கனவை நனவாக்கும் முயற்சி
நிகழாண்டு 12-ஆவது சர்வதேச யோகா தினத்துக்கான கருப்பொருள் 'ஆரோக்கியமான முதுமைக்கு யோகா' (யோகா ஃபார் ஹெல்தி ஏஜிங்), இந்தக் கருப்பொருள், ஆரோக்கியமான, சுறுசுறுப்பான வாழ்க்கை முறைக்கான முழுமையான அணுகுமுறையாக யோகா உலக அளவில் அதிக அங்கீகாரம் பெறுவதை உணர்த்துகிறது.
இந்த யோகப் பயிற்சிகள் அது குறித்தான நூல்கள் பாரதம் என்றைக்கும் வாழ்வியல் நெறிகளின் அடிப்படையிலும் சிந்தனையின் அடிப்படையிலும் ஒரே தேசம் என்ற உண்மையைப் பதிவு செய்கின்றன.
யோகக் கலை என்ற இந்த அறத்தை, மனிதகுலம் அனைத்துக்கும் எடுத்துச் செல்லும் பாரதப் பிரதமரின் முயற்சியே சர்வதேச யோகா தினம்.