கோடைக் காலத்தில் உடலில் நீரேற்றத்தை தக்கவைத்துள்ள நீர் ஆகாரங்கள் சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அந்த வகையில் உடலில் நீரேற்றத்தைத் தருவது மட்டுமின்றி உடலுக்கு ஏராளமான நன்மைகளையும் வழங்குகிறது. இதில் பொட்டாசியம், சோடியம், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.
இந்தியாவில் விளையும் தென்னைகளில் 'கொச்சின் சைனா' என்ற ரகம் சிறப்பானது. அதன் இளநீர் மிகவும் சுவையானது.
கோடை காலத்தில் தினமும் இரண்டு இளநீர் குடித்து வந்தால் போதும், சிறுநீர் தாராளமாகப் போகும். வெப்பத்தைத் தணித்து உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
வெப்பத்தால் ஏற்படும் நோய்களைக் கட்டுப்படுத்தும் சக்தி இளநீருக்கு உண்டு. செரிமானத்தை மேம்படுத்துகிறது.
சிறுநீரகக் கற்கள் உருவாவதை இளநீர் தடுக்கிறது. சிறுநீரகத் தொற்றுகளைக் குறைக்கிறது.
அதேநேரத்தில் இளநீரில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் அதனை அதிகமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. சிறுநீரக பிரச்னை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனை பெற்று அருந்துவது நல்லது.